அண்மைய செய்திகள்

recent
-

38,000 குற்றவாளிகளை விடுவிக்கும் அரசு: காரணம் என்ன..............?


துருக்கி அரசு தங்கள் நாட்டிலுள்ள 38,000 குற்றவாளிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே விடுவிக்க முடிவு செய்துள்ளது.

துருக்கியில் கடந்த மாதம் இராணுவ புரட்சி ஏற்பட்டது, எனினும் அரசுக்கு ஆதரவானவர்கள் புரட்சியை முறியடித்ததுடன் நாட்டை மீட்டனர்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 38,000 குற்றவாளிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கொலை, பாலியல் மற்றும் தீவிரவாதம் போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படவர்கள் இவர்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு, காவலில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை தங்க வைப்பதற்கு இடம் உண்டாக்குவதே அதிகளவில் குற்றவாளிகள் பரோலில் விடுதலை செய்யப்படுவதன் நோக்கம் என பிபிசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

38,000 குற்றவாளிகளை விடுவிக்கும் அரசு: காரணம் என்ன..............? Reviewed by Author on August 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.