500,000 பவுண்ட்ஸ், புடினுடன் ஒரு புகைப்படம்: அமெரிக்க நடிகை வேண்டுகோள்....
அமெரிக்காவின் பிரபல நடிகையான Lindsay Lohan என்பவர் ரஷ்யாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அந்நாட்டு அரசாங்கத்திடம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார்.
Pust govoryat என்ற Talk Show நிகழ்ச்சி ரஷ்யாவில் மிகப்பிரபலமான ஒன்றாகும், இந்நிலையில் இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க நடிகை Lindsay Lohan- க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன், ஆனால் நான் கேட்கும் சில வேண்டுகோள்களை அந்நாட்டு அரசாங்கம் நிறைவேற்றம் வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படியே, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் இவரிடம், ரஷ்ய தொழிலதிபர் Egor Tarabasov - யுடன் ஏற்பட்ட காதல் முறிவு பற்றி கலந்துரையாடுவதற்கு இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் முடிவு செய்திருந்தார்.
மேலும், நடிகை Lindsay Lohan வைத்துள்ள வேண்டுகோள்.
தனியார் ஜெட் விமானம்.
பாதுகாப்பு.
ஒரு வருடத்திற்கு ரஷ்யன் விசா மற்றும் அந்த விசாவானது புதுப்பிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
500,000 பவுண்ட்ஸ், அலங்காரம் மற்றும் ஒப்பனைகள்.
வசதியுடன் கூடிய வீடு.
இதை விட முக்கியமான ஒன்று, நான் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
500,000 பவுண்ட்ஸ், புடினுடன் ஒரு புகைப்படம்: அமெரிக்க நடிகை வேண்டுகோள்....
Reviewed by Author
on
August 22, 2016
Rating:

No comments:
Post a Comment