வடக்கு மற்றும் கிழக்கில் 50,443 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது!
வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 50,443 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்ட மற்றும் யுத்தம் இடம்பெற்ற சமயத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்ட இடங்கள் என்பவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
அதற்கமைய 2009ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கின் 82,550 ஏக்கர் நிலம் கொண்டுவரப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதில் தனியாருக்கு சொந்தமான இடங்கள் 30,300 ஏக்கர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நல்லிணக்கம் ஏற்பட்டதன் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது தாக்கம் ஏற்படாத இடங்கள் மீண்டும் விடுவிடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை யுத்தத்தினால் நிர்க்கதிக்குள்ளான பலர் இன்னும் முகாம்களில் தங்கியுள்ளதாகவும், மிக விரைவில் அவர்களுக்கும் இடங்கள் பெற்றுக்கொடுத்து, மீள் குடியேற்றம் செய்யும் பொருட்டு மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் 50,443 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது!
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment