அண்மைய செய்திகள்

recent
-

608 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர்....


வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 608 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 428 பேர் ஆண்கள் எனவும் 180 பேர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த மரணங்களில் 100 வீதமான மரணங்கள் திடீர் மரணங்கள் என்பதுடன் 367 பேர் சுகவீனம் காரணமாக மரணித்துள்ளனர்.

இறந்தவர்களில் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 28 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மேலும் 109 பேரின் மரணங்களுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.வெளிநாடுகளில் இறந்வர்களின் உறவினர்களுக்கு கடந்த ஆண்டு 20 கோடியே 96 லட்சத்து 91 ஆயிரத்து 63 ரூபா இழப்பீடு கிடைத்துள்ளது.

148 குடும்பங்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

608 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர்.... Reviewed by Author on August 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.