மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலை பங்கில் முதன்நன்மை திருவருட்சாதனம் பெற்ற 86 சிறார்கள்.......
மன்னார் மறை மாவட்டத்தில் அதிகமாக கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் தாய் பங்கு என அழைக்கப்படும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் வருடந்தோறும் சிறார்களுக்கு வழங்கப்படும் முதன்நன்மை விழா ஞாயிற்றுக் கிழமை (28.08.2016) பங்கு தந்தை அருட்பணி.அலெக்சாண்டர் பெனோ அடிகளார் தலைமையில் நடைபெற்றபோது 86 சிறார்களுக்கு நற்சான்றுகளும் திருச்செபமாலை வழங்கப்பட்டது.
இன்று காலை 6.30.மணிக்கு புனித வெற்றி அன்னை ஆலய பங்குத் தந்தை அலெக்சாண்டர் பெனோ சில்வா தலைமயில் இடம் பெற்றது. உதவி பங்குத்தந்தை பெகிலன். அருட் தந்தை டெனி இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுத்து முதன்நன்மை திருவருட்சாதனத்தை நிறைவேற்றிவைத்தனர்.இதில் அருட்பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலை பங்கில் முதன்நன்மை திருவருட்சாதனம் பெற்ற 86 சிறார்கள்.......
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment