புனித செபஸ்தியார் பேராலயப்பங்கில் 145 சிறார்களுக்கான உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம்-----
மன்னார் மறை மாவட்டத்தில் வருடந்தோறும் சிறார்களுக்கு வழங்கப்படும் உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் புனித செபஸ்தியார் பேராலயப்பங்கில் 145 சிறார்களுக்கான உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கும் விழா.....
இன்று ஞாயிற்றுக் கிழமை (28.08.2016) காலை மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் பங்கு தந்தை அருட்பணி.பெப்பி சோசை அடிகளாருடன் ஏனைய பங்குத்தந்தையர்கள் கூட்டாக திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்ததுடன் சிறார்களுக்கான உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம்வழங்கி இறைவனுக்குள் விசுவாசத்தோடு வாழவும் இறைபிள்ளைகளாக சமூதாயத்தில் கிறிஸ்த்தவ விழுமியங்களை கடைபிடித்து அன்புடன் கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழ ஆசீர்வதித்து அருளாசி வழங்கினார்.
இவ்விழாவில் சீறார்களுடன் பெற்றோர்கள் அருட்பணியாளர்கள் அருட்சகோதரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
புனித செபஸ்தியார் பேராலயப்பங்கில் 145 சிறார்களுக்கான உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம்-----
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment