தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த அமைச்சர் சுவாமிநாதன்!
மட்டக்களப்புக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் விஜயம் செய்து சிறைச்சாலைகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.
சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்த அமைச்சர் கைதிகளையும் பார்வையிட்டதுடன், அவர்களுடன் கலந்துரையாடலையும்மேற்கொண்டார்.
அத்துடன், சிறைச்சாலை வளாகத்தினை பார்வையிட்டதுடன் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி ரி.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், சிறைச்சாலையில் உள்ள ஏனைய சிறைக்கைதிகளையும் அமைச்சர் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை, சிறப்பான முறையில் சிறைச்சாலை வளாகத்தினை பராமரிப்பு செய்துவரும் சிறைச்சாலை அதிகாரிகளையும் அமைச்சர் பாராட்டியதுடன், சிறைச்சாலையின் நலன்புரி அமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த அமைச்சர் சுவாமிநாதன்!
Reviewed by Author
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment