இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.----பிரபலங்களின் வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிகின்றன
ரியோ ஒலிம்பிக் தொடரில் இன்று நடந்த பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்.
நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து, ஜப்பானை சேர்ந்த 6வது தரவரிசையில் உள்ள ஒகுகராவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றதுடன், வெள்ளிப் பதக்கத்தையும் உறுதி செய்தார்.
Indian Women Medallists in the History of Olympics
இந்நிலையில் இன்று தங்கப்பதக்கம் வெல்லும் கனவுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கினார் பி.வி. சிந்து.
அவர் இறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்த்து விளையாடினார்.
தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது. முதலில் நெருக்கடி கொடுத்த கரோலினாவை முதல் செட்டில் 21-19 என வீழ்த்தினார் சிந்து.
இந்நிலையில் 2வது செட்டில் ஆக்ரோஷமாக செயல்பட்ட கரோலினா 2வது செட்டை 21-12 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து நடந்த 3வது மற்றும் கடைசி செட்டில் இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் கரோலினா கடைசி செட்டை 21-15 எனக் கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்றார்.
இதன் மூலம் பி.வி.சிந்து தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த 120 கோடி இந்தியர்களின் கனவு தகர்ந்துள்ளது. இருப்பினும் சிந்து வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரஜினி நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன், என்னுடைய பாராட்டுக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பேட்மிண்டன் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை சிந்துவும், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினாவும் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்டும் நூலிழையில் தங்கப்பதக்கம் பறிபோனது. ஆனாலும் சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

சிந்துவின் ஆட்டத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனே அவருக்கு ட்விட் செய்துள்ளார். அதில் நான் உங்கள் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன், பதக்கம் வென்றதற்கு தன்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில். இந்திய மக்கள் அனைவரும் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறோம், பதக்கம் பெற்று தந்ததற்கு தன்னுடைய மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், சல்மான்கான், அக்ஷ்ய்குமார், கிரித்திக் ரோஷன் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு தெலுங்கான அரசு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.----பிரபலங்களின் வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிகின்றன
Reviewed by Author
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment