பெண் செய்தியாளர் கண்கலங்கியது இதனால் தான்!
பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் சிரியாவின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுவனை பற்றி படிக்கும் போது கண் கலங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
கடந்த பல வருடங்களாகவே சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது.
லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17ம் திகதி ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அந்தத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த உமரான் டாக்னீஷ் என்ற 5 வயது சிறுவன் தன்னார்வலர்களால் ஆம்புலன்ஸில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான்.
முகம் முழுவதும் ரத்தம் வழிய, கண்களில் அச்சமோ, அழுகையோ இல்லாமல் ஆம்புலன்ஸ் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தான் உமரான் டாக்னீஷ்.
வெறுமை படிந்த முகத்துடன் உமரான் டாக்னீஷ் அமர்ந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக சமூக வலைதளங்கள் முழுவதும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வாசிப்பாளராக உள்ள காட்டே போல்டான், ரத்தம் தொய்ந்த இந்த சிறுவனின் புகைப்படத்தை காட்டி செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது அவர் கண்கலங்கி விட்டார்.
"இவர்தான் ஒம்ரான். உயிரோடு தான் இருக்கிறார். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று கூறிய போது அவரது குரல் தழுதழுத்துவிட்டது.
இந்த சம்பவத்தை வெறும் செய்தியாக மட்டும் கடந்துச் செல்ல முடியாமல் செய்தியாளர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது.
பெண் செய்தியாளர் கண்கலங்கியது இதனால் தான்!
Reviewed by Author
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment