மஹிந்த ஆட்சிக்கும் மைத்திரி ஆட்சிக்கும் இடையே வேறுபாடுகளை காணமுடியவில்லை-வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன்.
புனர்வாழ்வு தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் முன்னாள் பேராளிகள், சந்தேக நபர்களான இளைஞர்கள் இருந்த காலத்தில் அவர்கள் மீது விஷ ஊசி ஏற்றபட்டமையும் விஷம் கலந்த உணவுப்பொருட்கள் வழக்கப்பட்டமையும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராளிகள் அப்பாவித்தனமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்த விடயத்தில் உண்மையை கண்டறிந்து எஞ்சியுள்ள போராளிகளை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்தையே சாரும் என வடமாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
ஏற்கனவே உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட போராளிகளை உள ரீதியான தாக்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.அந்த வகையில் உடனடியாக பாதீக்கப்பட்டதாக கருதப்படும் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்ற்கொள்ளப்பட வேண்டும்.
இறுதி யுத்த காலத்திலும் தடுப்பு காவல் காலத்திலும் விஷ ஊசிகள் எங்கிருந்து பெறப்பட்டன?என்பது எமது கோள்வியாக உள்ளது.
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டனவா என்ற கேல்வி எங்களிடம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியும்,அன்றைய சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இவ்விடையம் தெரியாமல் இருந்திருக்குமா?
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகப்புசெயாளர், சுகாதார அதிகாரிகளுக்கும் தெரியாமல் தடுப்பு முகாம்களுக்குள்ளும் சிறைச் சலைகளுக்குள்ளும் எப்படி விஷம் கலந்த ஊசிகளோ அல்லது உணவுப் பொருட்களோ கொண்டு வரமுடியும்.
இது ஒரு பாரதூரமான விடயமாகும். கடும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் சமூகத்தோடு இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் தற்போது மரண அச்சத்திற்குள் எப்போதும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.
கடந்த ஆட்சிக்கும் நல்லாட்சி எனப்படுகின்ற புதிய ஆட்சிக்கும் வேறுபாட்டை காண முடியதவர்களாக இருக்கின்றனர்.
முன்னாள் போராளிகளை சமூகத்தில் இணைத்து வெறும் நடை பினங்களாக திரிய விட முடியாது.
அவர்களுக்குரிய வாழ்கை வசதிகள் செய்து கொடுத்து இயல்பான வாழ்விற்கு வழி செய்து கொடுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கடமையாகும்.
உடல் வலிமையோடு இறுதி வரை களத்தில் நின்று போராடியவர்கள் இன்று வலிமையிழந்து சோர்வடைந்து தம் உடலிலேயே நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கும் நிலை தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் திட்டமிட்ட இனஅழிப்பின் ஓர் அங்கம் என்பதற்கு வேறு சாட்சியங்களோ ஆதாரங்களோ எமக்கு தேவையில்லை.
போராளிகள் கேட்டுக்கொண்டால் மாத்திரமே பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அலட்சியப்போக்குடன் இருந்துவிட முடியாது.
அனைத்து முன்னாள் போராளிகளும் பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட வேண்டும்.
இதற்கென விசேட பொறிமுறை ஒன்றை உருவாக்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்திய அரசு இவ்விடயத்தில் காலம் தாழ்த்தாமல் மருத்துவ பரிசோதனைகளை முன்னாள் போராளிகளுக்கு உடன் மேற்கொள்ள வேண்டும்.அரசாங்கம் இவ்விடயத்தில் தப்பி செல்லவே முயற்சிக்கின்றது.
முன்னாள் போராளிகள் சிலரை தன்பக்கம் இழுத்து அவர்களை அச்சுரூத்தி அவர்களினுடாகவே உலகத்திற்கு குறித்த செய்தி தவரானது என வெளிப்படுத்த முனையலாம்.
எனவே இவ்விடயத்தில் நிதானமாக செயற்பட வேண்டியது போராளிகளினதும், மக்கள் பிரதிகளினதும்,தலையான கடமை என கருதுகின்றேன்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக்கும் மைத்திரி ஆட்சிக்கும் இடையே வேறுபாடுகளை காணமுடியவில்லை-வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன்.
Reviewed by NEWMANNAR
on
August 18, 2016
Rating:

No comments:
Post a Comment