அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை விஞ்சிய பிரிட்டனில் இந்திய வம்சாவளி சிறுவன்.....
அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானிகளான , ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஐஸ்டீன் ஆகியோரை, இந்திய வம்சாவளி சிறுவன் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பார்க்கிங்சைப் என்ற நகரில் புல்வுட் பள்ளி படித்து வரும் இந்திய வம்சாவளி தருவ் 10, இவரது தந்தை வங்கி அதிகாரியாக உள்ளார். தாயார் ஆசிரியர். லண்டனில் மென்சா அறிவுத்திறன் சொசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இந்த சொசைட்டியில் உலகின் அதிக அறிவுத்திறன் வாய்ந்தோர் குழு உள்ளது.
இதில் உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவில் தருவ் இணைந்துள்ளார். இந்த சொசைட்டி சார்பில் கடந்த ஜூலை மாதம் நடந்த மென்சாவின் கேட் ( Cattell III B Paper) தேர்வில் கலந்து கொண்டார்.
இத்தேர்வில் அதிகப்படியாக 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.உலகில் அறிவுத்திறனில் (I.Q) -ல் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஆல்பர்ட் ஐஸ்டீன் ஆகியோரின் அறிவுத்திறன் 160 என கூறப்படுகிறது.
இவர்களை வென்று 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.இது குறித்து தருவ் கூறுகையில், தேர்வு கடினமாக இல்லை எனினும் கொடுக்கப்பட்ட நேரம் குறைவாக இருந்ததால் விரைவாக பதில் அளிப்பதற்கு கடினமாக இருந்தது என்றார்.
அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை விஞ்சிய பிரிட்டனில் இந்திய வம்சாவளி சிறுவன்.....
Reviewed by Author
on
August 12, 2016
Rating:

No comments:
Post a Comment