மன்னார் முற்சக்கர வண்டி சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு இடம் பெற வேண்டும்-உறுப்பினர்கள் கோரிக்கை.
மன்னார் முற்சக்கர வண்டி சங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள போதும், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கும் குறிப்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சிற்கும் பல தடவைகள் கவனத்திற்குகொண்டு வரப்பட்ட போதும்,இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுவதாக மன்னார் முற்சக்கர வண்டி சங்கத்தில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் மன்னார் முற்சக்கர வண்டி சங்கத்தில் உறுப்பினர்கள் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மன்னார் முற்சக்கர வண்டி சங்கம் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான பொதுக்கூட்டமும் நடத்தாது கணக்கு அறிக்கைகளும் இல்லாமல் தான்தோண்றித்தனமாக செயற்பட்டு வருகின்றது.
கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மன்னார் முற்சக்கர வண்டி சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற 30 அங்கத்தவர்கள் இணைந்து கையொப்பமிட்டு சங்க நிர்வாகத்தை கூடுமாறு வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் இது வரை எந்த விதமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
அங்கத்தவர்களாகிய நாங்கள் தங்களிடம் வேண்டி நிற்பது கடந்த 7 வருடமாக ஒரு தலைவர் மட்டும் இயங்கும் சங்கத்தை இனி வரும் காலங்களில் புதிய நிர்வாக அமைப்புடன் பதிய நிர்வாகத்தெரிவுடன் இயங்குவதற்கு புதிய நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆவனம் செய்ய வேண்டும்.
தற்போதுள்ள பழைய நிர்வாகத்தை மாற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
குறிப்பாக கடந்த 7 வருடத்திற்கு மேலாகியும் நிர்வாகத்தை கூட்டதிருத்தல், 15 பேர் கொண்ட நிர்வாகத்தில் தலைவர் மட்டும் தன்னிச்சையாக செயற்படுதல், ஏனையவர்கள் யார் என்பது சக உறுப்பினர்களுக்கு தெரிவு படுத்தாதிருத்தல், கணக்கரிக்கை இது வரை உறுப்பினர்களுக்கு காட்டாதிருத்தல், தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்து புதிய உறுப்பினர்களை உள்வாங்குதல், அனைத்து போதைவஸ்துக்களுடனும் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களை கண்டும் காணாதிருத்தல், பெண்கள் விடையத்தில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருத்தல், பாதசாரிகளுக்கு முன்பாகவே குறிப்பாக பெண்களுக்கு முன் தீய வார்த்தைப்பிரையோகங்களினால் சம்பாசனை செய்பவர்களை கண்டும் காணாதிருத்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றது.
குறித்த பிரச்சினைகளை தட்டிக்கேட்கும் சக உறுப்பினர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை முற்சக்கர வண்டியில் வைப்போம் என மிரட்டுதல்,முற்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து துரத்துவதாக அச்சுரூத்துதல்,இனவாதம் பேசி இரு சமூகங்களுக்கிடையே கருத்து முரண்பாட்டை உருவாக்குதல் உற்பட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.
எனவேறு பிரச்சினைகளுடன் தன்னிச்சையாக செயற்பட்டு வரும் சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் முற்சக்கர வண்டி சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு இடம் பெற வேண்டும்-உறுப்பினர்கள் கோரிக்கை.
Reviewed by Author
on
August 31, 2016
Rating:

No comments:
Post a Comment