நாளை முதல் க.பொ.த உயர்தர பரீட்சை!
2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் க.பொ.த உயர்தர பரீட்சை!
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 01, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment