சிரமசக்தி வேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்!
கிளிநொச்சி இளைஞர் சேவை மன்றத்தின் யுத் கோட் ரலன்ற் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் கிளிநொச்சி பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலக இளைஞர்கழகங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நடை பெறுகின்ற சிரமசக்தி வேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகளில் நாடலாவியரீதியில் 1500 இளைஞர்கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா 75000 ரூபா வழங்கப்பட்டும்.
அத்துடன், அவர்களது பிரதேசத்தில் கழகத்தினால் 150000 ரூபா திரட்டப்பட்டு மொத்தமாக 225000 ரூபாய் பெறுமதியில் சிறந்த செயற்திட்டம் ஒன்றினை முடிக்க வேண்டும்.
அவ்வாறு முடிக்கின்ற செயற்திட்டத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தினைப் பெறுகின்ற கழகத்திற்கு பத்துமில்லியன் ரூபாய் வழங்கப்படும்.
அத்துடன் முதல் எட்டு இடங்களை பெறுகின்ற கழகங்களுக்கு தலா ஒரு மில்லியன் பரிசாக வழங்கப்படும். இப்போட்டிக்காக கிளிநொச்சியில் இருந்து பதினோரு இளைஞர்கழகங்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகளே நடைபெற்றுவருகின்றன
அந்த வகையில் பூநகரி பிரதேச செயலக மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் என்.குபேந்திரா தலைமயில் இன்று நேர்முகப்பரீட்சை நடைபெற்றது.
தொடர்ந்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மண்டபத்திலும் நடைபெற்றது இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் என்.குபேந்திரா இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிரமசக்தி வேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்!
Reviewed by Author
on
August 05, 2016
Rating:

No comments:
Post a Comment