நிர்க்கதியான நிலையில் குவைத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள இலங்கைப் பெண்கள்...
குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்று, அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 35 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
விஷேட விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான நிலையில், குவைத் தூதரகத்தின் பாதுகாப்பு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 1183 பேர் இவ்வாறு குவைத் தூதரகத்தில் தங்கியிருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சவுதியில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கியிருந்த 9 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிர்க்கதியான நிலையில் குவைத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள இலங்கைப் பெண்கள்...
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment