தரக்குறைவாக வீதியை புனரமைத்து சாதனை! மக்களுக்கு வேதனை!
கொக்காவில் துணுக்காய் செல்லும் C023 பிரதான வீதி சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால் பல அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கொக்காவில் சந்தி தொடக்கம் C023 வீதி 10கிலோமீற்றர் தூரத்திற்கு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளபோதும் அவை தரக் குறைவாகவே காணப்படுவதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, 25 கிலோ மீற்றர் நீளமான C023 வீதி 10 கிலோமீற்றர் தூரம்வரை தரக் குறைவாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் மிகுதித்தூரம் புனரமைப்பு செய்யப்படவில்லை என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு புனரமைத்த வீதி மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதுடன் சமிக்கை குறியீட்டு பலகைகள் அனைத்தும் விழுந்து சேதமடைந்தும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தரக்குறைவாக வீதியை புனரமைத்து சாதனை! மக்களுக்கு வேதனை!
Reviewed by NEWMANNAR
on
August 14, 2016
Rating:

No comments:
Post a Comment