இளவரசி டயானா பையில் “பாலியல் பொம்மை”!
இளவரசி டயானா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தனது பையில் பாலியல் பொம்மையை வைத்திருப்பார் என அவரது முன்னாள் பாதுகாவலர் Ken Wharfe கூறியுள்ளார்.
இளவரசி டயானா குறித்த புத்தகத்தில் பாதுகாவலர் Ken Wharfe கூறியுள்ளதாவது, டயானா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அவருடன் நான் இருந்திருக்கிறேன்.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிற நாட்டு தலைவர்களுடன் மரியாதையுடனும், நற்பண்புடனும் பேசுவதில் டயானா சிறந்தவர் ஆவார்.
இவ்வாறு வெளிநாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம், தனது பையில் பாலியல் பொம்மையை வைத்திருப்பார், ஏனெனில் அந்த பாலியல் பொம்மை இவரது அதிர்ஷ்ட தேவதை ஆகும்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, Le Gaget என்ற பாலியல் பொம்மையை இவரது சகோதரி கடையில் வாங்கி, டயானாவின் பையில் வைத்தார்.
அந்த பொம்மை டயானாவின் பையில் வந்தவுடன் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. 1993 ஆம் ஆண்டு நேபாள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரண்மனையில் தனது பாலியல் பொம்மையை டயானா மறந்துவைத்துவிட்டார்.
இதனால் அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, பாலியல் பொம்மை இல்லாமல் எல்லாமே மிகவும் தவறாக நடந்துவருகிறது என என்னிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் அந்த பாலியல் பொம்மை, வரவழைக்கப்பட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது, அந்த பாலியல் பொம்மை இவரை சென்றடைந்த நேரம், பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அருகில் இருந்த ராயல் கடற்படை கேப்டன் எட் மஸ்தோ அதனை பிரிக்கும்படி அவரிடம் உத்தரவிட்டார், ஆனால் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை அறியாத டயானா அதனை திறந்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் அதனை காட்டிக்கொள்ளாமல் இது எனக்கு மட்டும் தான் என சத்தமாக பத்திகையாளர்கள் முன்னிலையில் சிரித்து சமாளித்தார் என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
இளவரசி டயானா பையில் “பாலியல் பொம்மை”!
Reviewed by Author
on
August 14, 2016
Rating:

No comments:
Post a Comment