18 வயது சிறுவனை காதலித்து மணந்து கொண்ட 5 குழந்தைகளின் தாய்.....
மலேசியாவில் 18 வயது மாணவன் 5 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மலேசியாவின் பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் மொசுத்சுபி அலின்(18). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபியா குஸ்டி(42) என்ற பெண்ணை கடந்த செவ்வாய் கிழமை திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து சுபி அலியின் தந்தையான அலின் கூறியதாவது, இவர்கள் இருவரும் தங்களின் சொந்த முடிவை மேற்கொள்வதற்கு போதிய அளவு முதிர்ச்சி பெற்றுள்ளனர்.
சோபிய குஸ்டி தனது மகனை காதலித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு அவர் தன் மகனிடம் மனம்விட்டு பேசியுள்ளார்.
அப்போது கணவர் எவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என விளக்கினார். தான் உங்கள் மனைவி மட்டும் என்று கருத்தில் கொள்ளாமல் 5 மகன்களின் நிலைமையும் கருத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இத்திருமணத்தில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இத்திருமணத்தில் இரு குடும்பத்தவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
18 வயது சிறுவனை காதலித்து மணந்து கொண்ட 5 குழந்தைகளின் தாய்.....
Reviewed by Author
on
August 28, 2016
Rating:

No comments:
Post a Comment