மருந்து விலைகள் குறைக்க விலைச் சூத்திரம் தயாரிப்பு.....
எதிர்வரும் இரு வருட காலத்தில் இலங்கைக்கு தேவையான மருந்துகளில் 75 வீதத்தை உள்நாட்டிலே உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாக சுகாதார போசாக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு வருடாந்தம் 58 மில்லியன் ரூபா செலவிடுவதாக குறிப்பிட்ட அவர் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதினூடாக அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஒகஸ்ட் மாத இறுதிக்குள் மருந்து விலைகளை குறைக்கும் விலைச் சூத்திரமொன்றை தயாரித்து 2 மாத காலத்தினுள் மருந்து விலைகளை குறைக்கும்
முறையொன்றை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஊடக வாணிப சபையின் 58 வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மருத்துவ சந்தை தொடர்பில் தனியார் துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. நான் சுகாதார அமைச்சராக பணிபுரிந்து வரும் வருடம் காலத்தில் எந்தவித மருந்துத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டில் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் இங்கு கூறினர்.
தேசிய ஔடத கட்டுப்பாட்டு சபையினூடாக குறைந்த சில்லறை விலைக்கு மருந்து வகைகளை மக்களுக்கு வழங்குவது எமது பொறுப்பாகும்.
ஓய்வூதியம் பெறுவோர் ஒரு மாதத்திற்கு மருந்து தேவையான போதும் 2 வாரங்களுக்கே மருந்துகளை வாங்குவர்.
அவர்களுக்கு அதிகவிலை கொடுத்து மருந்து வாங்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2 மாத காலத்தில் ஔடத விலைகளை குறைக்கும் முறையொன்றை தயாரிக்குமாறு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக கூறிய அவர் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் மருந்து விலைகளை குறைக்கும் விலைச் சூத்திரத்தை தயாரித்து மக்களுக்கு நிவாரண விலையில் மருந்துகளை வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மருந்து விலைகள் குறைக்க விலைச் சூத்திரம் தயாரிப்பு.....
Reviewed by Author
on
August 02, 2016
Rating:

No comments:
Post a Comment