அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் புனித லோறன்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி.

வருடாந்தம் நடைபெறும் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமிகளுன்கான விளையாட்டுப் போட்டியானது

கடந்த 30.07.2016 அன்று மாலை 3.30 மணிக்கு தலைமன்னார் மேற்கு கிராமத்தில் புனித லோறன்சியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இதன் பிரதம விருந்னராக இம் மண்ணின் அருட்சகோதரி கொறற்றி அவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியக் கருவிகள் இசைக்கப்பட வரவேற்கப்பட்டார். இவருடன் சிறப்பு

விருந்தினர்களாக சிறுத்தோப்பு அருட்தந்தை ரொனிஸ் வாஸ் மற்றும் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்தந்தை நவரட்ணம் அவர்களும் தலைமன்னார் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரிகளும்கலந்து கொண்டனர்.

இதில் 4 - 5 வயது மாணவ மாணவிகள் விளையாட்டில் பங்கு கொண்டனர். இதில் தவலைப் பாச்சல் தாரா நடை சிரட்டை நடை நண்டு ஓட்டம் கரண்டியில் மாபில் கொண்டு செல்லுதல் சாக்கோட்டம் மிருக அஞ்சல் கட்டை கோர்த்தல் தலையில் கட்டை வைத்து நடத்தல் வண்டி ஓட்டம் கால் கட்டி ஓட்டம் குளிர்பானம்அருந்துதல் காலில் கட்டை வைத்து நடத்தல் ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு. உடற்பயிற்சி ஆகிய விளையாட்டுக்களும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.  இறுதியாக விருந்தினர்கள் சிறுவர்

சிறுமிகளுக்கு அன்பளிப்பு வழங்கியமையுடன் அன்று மாலை 5.45 மணியளவில் நிகழ்வுகள்மகிழ்வுடன் மக்கள் மத்தியில் நிறைவுற்றது.








தலைமன்னார் புனித லோறன்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி. Reviewed by NEWMANNAR on August 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.