விடுதலைப்புலிகளின் தலைவருக்கு மரணச் சான்றிதழ் எங்கே!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், அவருக்கு இது வரையிலும் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் ஒரு போராளி என்பதற்காக அவரின் உயிரிழப்பை மறைத்திருந்தாலும், டி.என்.ஏ பரிசோதனை செய்ததாக அரசு அறிவித்தது.

இது ஒரு வெளிப்படையான உண்மை. எனவே, பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்த உயரிய சபையில் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவருக்கு மரணச் சான்றிதழ் எங்கே!
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment