வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீளப்பெறல்!
வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் மீளப்பெற்றுக்ககொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சில் இடம்பெற்றதாக நம்பப்படும், மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதன் ஊடாக விசாரிக்க வேண்டும் என மாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி கடந்த 45ஆம் அமர்வில் ஒரு பிரேரணையை கொண்டுவந்தார்.
அது பின்னர் முதலமைச்சர் சபையில் இல்லை. விவசாய அமைச்சர் சபையில் இல்லை என பல காரணங்கள் காட்டப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 60ஆம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது, முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் சபையில் இல்லாத நிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
எதிர் கட்சி உறுப்பினர் எஸ்.தவநாதன் மற்றும் ம.தியாகராசா, சிராய்வா, சிவாஜிலிங்கம் ஆகியோர் பரஞ்சோதியின் பிரேரணையினை எதிர்த்தனர்.
குறிப்பாக அமைச்சர்களை விசாரிக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கும் நிலையில் மீள மீள இவ்வாறான பிரேரணைகளை கொண்டுவருவதன் ஊடாக மாகாணசபை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கெடுக்காதீர்கள் என கூறியதுடன், பரஞ்சோதியின் பிரேரணை தேவையற்றது எனவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பின் முதலமைச்சரின் விசாரணை குழுவிற்கு சமர்ப்பியுங்கள் எனவும் கூறினர்.
இந்நிலையில் மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், லிங்கநாதன், அஸ்மின் போன்றவர்கள் பரஞ்சோதியின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இறுதியில் உறுப்பினர் பரஞ்சோதி தமது பிரேணையினை மீளப் பெறுவதாகவும், முதலமைச்சரின் விசாரணை நிறைவடைந்து அறிக்கை வெளியானதன் பின்னர் அதனை மீள எடுப்பதாகவும் கூறினார்.
வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீளப்பெறல்!
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment