ஒரு மணி நேரம் பேசுவதற்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம்: யார் அந்த வி.ஐ.பி?
பிரித்தானிய முன்னாள் பிரதமரான டேவிட் கமெரூன் பதவியை இழந்த பிறகும் தற்போது பணமழையில் நனைந்துக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக பதவியை இழந்த முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதி அதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டுவார்கள்.
இவ்வகையில், பிரித்தானிய முன்னாள் பிரதமர்களான மார்க்ரெட் தாட்சரின் புத்தகம் கடந்த 1993ம் ஆண்டு 3.5 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை ஆனது.
இவரை தொடர்ந்து 2007ம் ஆண்டு டோனி பிளேயரின் புத்தகம் 4.6 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை ஆனது.
இதே வரிசையில் தான் தற்போது டேவிட் கமெரூனும் வருமானத்தை குவிக்க உள்ளார்.
எனினும், அமெரிக்கா போன்ற சில வல்லரசு நாடுகளில் மார்க்ரெட் தாட்சர் மற்றும் டோனி பிளேயருக்கு அதிகம் செல்வாக்கு இருந்தது. இவர்களுடைய புத்தகங்களும் அமோகமாக விற்பனை ஆனது.
ஆனால், பிரித்தானிய முன்னாள் பிரதமரான டேவிட் கமெரூனிற்கு அமெரிக்காவில் அதிக செல்வாக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், தான் பிரதமராக பணியாற்றியபோது சந்தித்த அனுபவங்கள் தொடர்பான கமெரூனின் புத்தகம் 1.5 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 9 மாதங்களில் கமெரூன் தனது புத்தகத்தை எழுதி முடிப்பார் என்றும், 2017ம் ஆண்டு அப்புத்தகம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், இனிவரும் நாட்களில் தனது அனுபவங்கள் தொடர்பாக பேசுவதற்கு அவர் ஒரு மணிக்கு 50,000 பவுண்டுக்கும்(95,34,869 இலங்கை ரூபாய்) மேல் வருமானம் ஈட்ட உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மணி நேரம் பேசுவதற்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம்: யார் அந்த வி.ஐ.பி? 
 
        Reviewed by Author
        on 
        
September 19, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 19, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment