2017ஆம் ஆண்டு 5 தேர்தல்கள்! தயாராகி வருகின்றது அரசு...
2017ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்புடன் மொத்தமாக 5 தேர்தல்களை நடத்த அரசு தயாராகி வருகின்றது என்று நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
புதிய அரசமைப்புத் தொடர்பான விடயங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிவடையும் நிலை காணப்படுவதால் அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முன்னர் புதிய அரசமைப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு மொத்தமாக 5 தேர்தல்களை நடத்த அரசு தயாராகி வருகின்றது. அதாவது, அரசமைப்பு குறித்த சர்வஜன வாக்கெடுப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றுடன் வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நடைபெறவுள்ளன.
குறித்த மூன்று மாகாண சபைகளுக்கான கால எல்லை 2017ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடையவுள்ளதால் அவற்றுக்கான தேர்தலையும் நடத்த அரசு தயாராகி வருகின்றது.
2017ஆம் ஆண்டு 5 தேர்தல்கள்! தயாராகி வருகின்றது அரசு...
Reviewed by Author
on
September 30, 2016
Rating:

No comments:
Post a Comment