அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை வதைக்கும் வறட்சி - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு....


வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது.

சுமார் 44 ஆயிரம் குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றியுள்ளதால் பல மைல்தூரம் நடத்துச்சென்றே நீரைப்பெறவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒருமாதத்துக்கும் மேலாக நீடித்துவரும் வறட்சி காரணமாக சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பல தாவரங்கள் நீரின்றி கருகிமடியும்நிலை உருவாகியுள்ளதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.

அதேவேளை, குளங்களும், நீர்நிலைகளும் நீரின்றி காணப்படுவதால் மீன்கள் செத்துமடிகின்றன. காட்டு யானைகள் நீர்தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றனர்.

மின்னேரியா பகுதியில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் மீது காட்டு யானைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. பிரதேச சபைகள் ஊடாக நீர்வழக்கும் நடவடிக்கை இடம்பெற்றாலும் அதுபோதுமானதாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், மின்உற்பத்தில் நிலையங்களை சூழவுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளது. எனினும், மின் தட்டுப்பாடு தற்போதைக்கு ஏற்படாது என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, தற்போது நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கும் என்றும், அதன் பின்னரே மழைபெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டளவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேல் மாகாணத்திலும், மலையகத்திலும் சில பகுதிகளில் மழைவீழ்ச்சிப் பதிவாகியுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,

வறட்சி காரணமாக, கிழக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்து 458 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 678 பேரும், வடமத்திய மாகாணத்தில் பொலனறுவை மாவட்டத்தில் மாத்திரம் 18 ஆயிரத்து 951 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 431 பேரும், வடமேல் மாகாணத்தில் 2 ஆயிரத்து 377 கடும்பங்களைச் சேர்ந்த 7732 பேரும், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 3111 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை வதைக்கும் வறட்சி - ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு.... Reviewed by Author on September 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.