கரைதுரைப்பற்றில் ஏழு வருடங்களாக தற்காலிக வீட்டில் வாழும் 5200 குடும்பங்கள்....
இறுதியுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக பிரிவின்கீழ் மீள்குடியேரிய குடும்பங்கள் 7 வருடங்கள் கடந்தும் தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் மொத்தம் 46 கிராம அலுவலர் பிரிவுகளில் 5144 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என்றும் போரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் 648 குடும்பங்களுக்கு வீடுகள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் கரைதுரைப்பற்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது புள்ளி அடிப்படையில் வீடுகள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக குறித்த பிரதேச செயலக உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
கரைதுரைப்பற்றில் ஏழு வருடங்களாக தற்காலிக வீட்டில் வாழும் 5200 குடும்பங்கள்....
Reviewed by Author
on
September 11, 2016
Rating:

No comments:
Post a Comment