இலங்கை பயங்கரவாத அரசின் நிகழ்வை புறக்கணித்த சுவிஸ் தமிழர்கள் ....
இலங்கை பயங்கரவாத இனப்படுகொலை அரசானது சுவிஸின் சூரிச் Bulach நகரத்தில் நடாத்திக்கொண்டிருக்கும் Sri Lanka t food and culturel festival நிகழ்வை புறக்கணித்து சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.
தமிழின அழிப்பை மூடி மறைத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இலங்கையின் செல்வாக்கை பெருக்குவோம் என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாத அரசானது சர்வதேச ரீதியில் இப்படியான நிகழ்வுகளை நடாத்துவதன் மூலமாக இச் செயற்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.
இச் செயற்திட்டமானது வெள்ளோட்டத்திலேயே சுவிஸ் தமிழர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 15.30 மணியளவில் அகவணக்கத்துடன் தொடங்கிய இக் கவனயீர்ப்பு போராட்டம் பல சிறப்பு பேச்சுக்களுடனும், தமிழின அழிப்பை வெளிக்கொணரும் பதாகைகள் தாங்கிய மக்களுடனும் சிறப்பாக ஆரம்பமாகி நிறைவடைந்தது.
இந்த நிகழ்விற்கு சுவிஸ் சூரிச் Bulach பொலிஸாரும், நகரசபையினரும் ஆதரவை வழங்கியதோடு அப் பிரதேசத்தின் பிரதான ஆறு பத்திரிகைகளில் செய்திகளாகவும் வெளிவந்திருந்தது.
பல ஊடகங்களின் பிரயத்தனங்களின் மத்தியிலும், இக் கவனயீர்ப்பு சார்ந்த பிழையான செய்திகளுக்கு மத்தியிலும் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வானது அனைத்து சதிகளையும் தவிடுபொடியாக்கி அமைதியான முறையிலும், சுவிஸ் நாட்டின் சனனாயக மரபுகளை பின்பற்றியும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது.
மிகவும் குறுகிய கால ஏற்பாட்டில் ஒழுங்கு செய்த நிகழ்வாக இருந்த பொழுதிலும் பல தமிழர்கள் கலந்து கொண்டதோடு பெரும்பான்மை சுவிஸ் வாழ் தமிழ் சமூகம் இலங்கை பயங்கரவாத அரசின் சதியை பகுத்தறிந்து புறக்கணித்தது.
இந்த கவனயீர்ப்பு ஒன்று கூடலை சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு போன்ற அமைப்புக்கள் சேர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் சமூகத்தின் ஆதரவோடு ஒழுங்கமைத்து இருந்தனர்.
இறுதியாக அங்கு கூடியிருந்த மக்கள் எதிர்காலத்திலும் எமது இலட்சியம் நோக்கிய பாதையில் எத்தடைகள் வரினும் அவற்றை கடந்து பயணிப்போம் என உறுதி எடுத்து தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என ஓங்கி ஓலித்து கவனயீர்ப்பை நிறைவு செய்தனர்.
இலங்கை பயங்கரவாத அரசின் நிகழ்வை புறக்கணித்த சுவிஸ் தமிழர்கள் ....
Reviewed by Author
on
September 11, 2016
Rating:

No comments:
Post a Comment