பேருந்தினுள் மின்சாரம் பாய்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு 25 பேர் காயம்....
ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் 6 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் தென்கானல் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சிசுமந்திர் எனும் பகுதியில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. குறிப்பிட்ட பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பேருந்தின் ஓட்டுநர் முக்கிய சாலையில் இருந்து சற்று விலகி அருகில் உள்ள செம்மண் சாலை வழியாக பேருந்தை செலுத்தியுள்ளார்.
அப்போது அந்த சாலை ஓரத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்சார கம்பி ஒன்று திடீரென்று அறுந்து விழுந்துள்ளது. இதில் அந்த பேருந்து சிகியுள்ளது.
குறிப்பிட்ட பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்த 45 பயணிகளில் 6 பேர் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தானது கட்டக்கில் இருந்து காமாக்ஷ்ய நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சம்பவயிடத்திடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைசர் நவின் பட்நாயக் அறிவித்துள்ளார்.
பேருந்தினுள் மின்சாரம் பாய்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு 25 பேர் காயம்....
Reviewed by Author
on
September 21, 2016
Rating:

No comments:
Post a Comment