அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை தொடங்கியது....


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகிலேயே முதன் முதலாக ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று ஜேர்மனி நாட்டில் தொடங்கியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Lower Saxony மாகாணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Alstom என்ற நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயிலை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளது.

Coradia iLint எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலின் கூரை மீது ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரயில் இயங்குவதால் புகை உள்ளிட்ட எதுவும் வெளியாகாது.

மேலும், இந்த எரிவாயு சிலிண்டர்கள் மூலம் ஒரே நேரத்தில் ஒரு ரயில் 600 முதல் 800 கி.மீ வரை பயணமாகும்.

மணிக்கு 140 கி.மீ வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்றும் தொலைதூர பயணங்களுக்கு இந்த ரயில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த பயணிகள் ரயில் எதிர்வரும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை தொடங்கியது.... Reviewed by Author on September 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.