போர் குற்றம் பற்றி சர்வதேச விசாரணைக்கு அனுமதி இல்லை: இலங்கை திட்டவட்டம்....
போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இராணுவம் குற்றம் இழைத்திருந்தால் அதன் உண்மை தன்மையை தெரிந்துகொள்ள முயற்சிப்பது தவறு இல்லை என்றும் கடந்த ஆட்சி காலங்களில் உயர் மட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்களால் குற்றங்களை செய்திருக்கலாம் என்றும் வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை மற்றும் கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மங்கள சமரவீர தேவைப்பட்டால் சர்வதேச ஆலோசனைகள் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார்.
போர் குற்றம் பற்றி சர்வதேச விசாரணைக்கு அனுமதி இல்லை: இலங்கை திட்டவட்டம்....
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment