அண்மைய செய்திகள்

recent
-

கருக்கலைந்ததை கண்ணீர் விட்டு தெரிவித்த முதலமைச்சர்.....


ஸ்கொட்லாந்து முதலமைச்சரான நிக்கோலா ஸ்டூர்ஜின் என்பவருக்கு கருக்கலைந்ததை முதன் முதலாக கண்ணீர் விட்டு தெரிவித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டில் ஒரு அங்கமான ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக(First Minister) நிக்கோலா ஸ்டூர்ஜின்(46) என்பவர் பதவி வகித்து வருகிறார்.

பிரித்தானிய நாட்டை விட்டு ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என அந்நாட்டு பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறார்.

ஸ்கொட்லாந்து நாட்டின் Scottish National Party என்ற கட்சியை சேர்ந்த நிக்கோலா இதே கட்சியின் தலைவரான Peter Murrell என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், இவர்களுக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நிக்கோலா தனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பதை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

’சில பெண்கள் சாதாரணமாகவே குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். சில பெண்கள் வேலை பாதிப்படையும் என்ற காரணத்திற்காக குழந்தை பெற மாட்டார்கள். சில பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என மிகவும் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், அவர்களின் உடல்நலன் காரணமாக அவர்களுக்கு குழந்தை பிறக்காது.

எனக்கும் உடல்நிலை காரணமாக தான் இதுவரை குழந்தை பிறக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு நான் துணை முதலமைச்சராக இருந்தபோது கடவுள் பாக்கியத்தில் கர்ப்பம் ஆனேன்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பொதுமக்களிடம் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டபோது, துரதிஷ்டவசமாக கரு கலைந்து விட்டது’’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

’’ஒருவேளை கருக்கலையாமல் இருந்திருந்தால், இப்போது நான் ஸ்கொட்லாந்து நாட்டின் முதலமைச்சராக உங்கள் முன்னால் நின்றுருப்பேனா என என்னால் உறுதியாக கூறமுடியாது.

குழந்தை பிறக்காவிட்டாலும், இந்த கடினமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்’ என உருக்கமாக நிக்கோலா ஸ்டூர்ஜன் பேசியுள்ளார்.

தற்போது பிரித்தானிய நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள தெரசா மே என்பவருக்கும் உடல்நலன் காரணமாக இதுவரை குழந்தை பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருக்கலைந்ததை கண்ணீர் விட்டு தெரிவித்த முதலமைச்சர்..... Reviewed by Author on September 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.