அண்மைய செய்திகள்

recent
-

ரூ.500 கட்டணத்தில் சிறை கைதியாக வாழ வாய்ப்பு! எந்த நாட்டில் தெரியுமா?


தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒருநாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேடக் மாவட்டம், சங்காரெட்டியில் உள்ள 220 ஆண்டு பழைமை வாய்ந்த மாவட்ட மத்திய சிறை தற்போது அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது.

அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறைச்சாலையில் உள்ள சிறை அறைகளில் ஒருநாள் முழுக்க தங்கிச்செல்ல கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

சிறை அறையில் தங்க வருபவர்களுக்கு சிறை கைதிகளுக்கான சீருடை, ஈயத்திலான சாப்பாட்டுத் தட்டு, நீர்க் குவளை, குளியல் சோப் ஆகியவை வழங்கப்படுகிறது.

சிறைச்சாலையில் தங்கும் நபர்கள் கைதிகள் போல் வேலை செய்ய தேவையில்லை. ஆனால் தாங்கள் தங்குமிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி,ஒரு மரக்கன்றையும் நடவேண்டும் என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ரூ.500 கட்டணத்தில் சிறை கைதியாக வாழ வாய்ப்பு! எந்த நாட்டில் தெரியுமா? Reviewed by Author on September 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.