அண்மைய செய்திகள்

recent
-

ஈழ விடுதலை போராளி தியாக திலீபனின் நினைவு நிகழ்வுகள்...


கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை வழியில் போரடிய ஈழ விடுதலை போராளி தியாக திலீபனின் 29வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று அறிவகத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தியாக திலீபனின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் அணிவித்துள்ளார்.

Tributes for Thiyagi Thileepan - Kilinochchi
பின்னர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஈழவிடுதலைப் போராட்டத்தில் விரகாவியமான மாவீரர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கமும் இடம் பெற்றது.

தொடர்ந்து சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட குருதி கொடையளித்தல் நிகழ்வில் கட்சியின் தொண்டர்கள் அங்கத்தவர்கள் மக்கள் ஒன்றினைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு 50க்கு மேற்பட்டோர் இரத்தானம் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடக்குமாகாண கல்வி அமைச்சர் மற்றும் இரணைமடு கமக்காரா அமைப்பின் தலைவர் சிவமேகாகன் ஊடகசங்கத் தலைவர் டொக்கடர் திருலோகமூர்த்தி, அழகக சங்கத் தலைவர், வர்த்ததக சங்க செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழ விடுதலை போராளி தியாக திலீபனின் நினைவு நிகழ்வுகள்... Reviewed by Author on September 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.