அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முதல்வரின் துரித நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள்-photos

அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள்,தமது துரித விடுதலை குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற செய்தியை அறிந்த நிலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் இன்று (27) செவ்வாய்க்கிழமை மதியம் முதல் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல்,குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலக்கு இன்று சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டனர்.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

அனுராதபுரம் சிறைச்சாலையிலே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கும் முகமாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் அனுராத புரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தோம்.

மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம்,அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர்; அருட்தந்தை மா.சக்திவேல்,குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது அரசியல் கைதிகளை சந்தித்த போது அவர்கள் தமது விடுதலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை எங்களிடம் தெரிவித்தனர்.

அரசியல் கைதிகளின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் ஆதங்கங்களில் இருந்து தெரிய வருகின்றது.ஒரு விணைத்திறனான வழக்கு செயன்முறை தங்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றங்களுக்கு இடையே பாகுபாடு காண்பிக்கப்படுவதாக போன்ற குறைபாடுகளை கூறியிருந்தார்கள்.

எனவே விணைத்திறனான வழக்கு பொறிமுறை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கும்,சரியான நீதிமன்றங்களுக்கு தமது வழக்குகளை மாற்றிக்கொள்ளுவதனையும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடையம் என கருத்தில் கொண்டுள்ளார்கள்.

இவ்விடையம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் ஊடாக முதலமைச்சருக்கு நேற்று திங்கட்கிழமை(26) செய்தி ஒன்றையும் தெரிவித்துள்ளனர்.

குறித்த செய்தி செயலாளர் ஊடாக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைவாக அனுராத புரச்சிறைச்சாலைக்கு சென்ற சமையம் முதலமைச்சரின் செய்தி முதலமைச்சரினால் தொலைபேசியூடாக எனக்கு கிடைக்கப்பெற்றது.

அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் அவசர கடிதம் ஒன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் அரசியல் கைதிகளின் துரித விடுதலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அவசர நடவடிக்கை குறித்து அரசியல் கைதிகளிடம் தெரிவித்த போது 7 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து குறித்த அரசியல் கைதிகள் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்தார்கள்.

அதற்கமைவாக அங்கு சென்ற நாங்கள் அவர்களுக்கு குளிர் பாணங்களை வழங்கி அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறுத்தியுள்ளோம்.அரசியல் கைதிகள் பல்வே வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும்,இவர்களின் விடுதலை தொடர்பில் பல பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றமையினை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல் கைதிகளுக்கு இடையில் உள்ள வழக்குகள் தொடர்பான விபரங்களில் குழப்பங்கள் காணப்படுகின்றது.
ஒரு சில இடங்களில் நியாயமானவர்கள் என விடுதலை செய்யப்பட்டவர்கள்,வேறு இடங்களில் மேலதிக வழக்கு அல்லது குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.

சில கைதிகளுடைய வழங்குகள் பொருந்தாத வகையில் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளமையினால் விடுதலைக்கான காலம் இழுத்தடிக்கப்படுகின்றது.

எனவே இங்கு பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதை அரசியல் கைதிகள் எங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.எனவே சிறந்ததொரு விணைத்திரனான ஒரு வழக்கு பொறிமுறையினை உறுவாக்கி நீதிமன்றங்கள் அவற்றை கையாண்டு,தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்யது தற்காலிக தேவையாக இருந்தாலும்,எல்லா வற்றிற்கு மேலதிகமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனை அற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தான் இறுதியான முடிவாக இருக்க வேண்டும்.ஆகவே எங்களுடைய போராட்டங்களும் முக்கியமாக அதனை நோக்கியே செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.இவ்விடையங்களை அரச தரப்பு கவனத்தில் கொண்டு சரியான நீதியை வழங்குவதற்கு திறந்த வெளிப்படைத்தண்மையுடன் முன் வர வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.







வடக்கு முதல்வரின் துரித நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள்-photos Reviewed by NEWMANNAR on September 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.