ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் பதவி பறிப்பு!
முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் மீது பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவரது ஜனாதிபதி பதவி பறிக்கப்பட்டது.
தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலின் ஜனாதிபதியாக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தில்மா ரூசெப் (68) பதவி வகித்து வந்துள்ளார்.
இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேசிய நிதி நிலை அறிக்கையை திருத்தி முறைகேடு செய்து நாட்டிற்கு பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த மே மாதம் பாராளுமன்ற செனட் சபை, தில்மா ரூசெப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு செய்ததது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்நாட்டு தேசிய காங்கிரஸ் எனப்படும், பாராளுமன்றக் கூட்டத்தொடரின் செனட் சபையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தது.
மொத்தம் 81 உறுப்பினர்களில் 61 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 20 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து அவரது ஜனாதிபதி பதவி பறிக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதியாக தில்மா ரூசெப் பதவியேற்றார். 2014-ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தார்.
வரும் டிசம்பர் 2018-ம் ஆண்டு இவரது பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி தலைவர் மிகைல் டெமர் பிரேசிலின் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்போற்று செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் பதவி பறிப்பு!
Reviewed by Author
on
September 01, 2016
Rating:

No comments:
Post a Comment