ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் வீராங்கனையின் கிராமத்துக்கே மின்வசதி!
ஒவ்வொரு நாட்டு வீரர் -வீராங்கனைகளும் எவ்வளவோ கஷ்டத்திற்கும் கடினஉழைப்பிற்க்கும் அப்பாற்பட்டுதான் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் கென்யா 6 தங்கம் 6 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வெற்றிகொண்டிருந்தது.
ஆப்பிரிக்காவில் வறுமைத் தாண்டவமாடும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. குறைந்தது 20 ஊர்களுக்கு ஒரு பள்ளிதான் இருக்கும்.
பல கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டி நிலை காணபடும்.
காடு, மலை, வனவிலங்குகள் இவற்றையெல்லாம் கடந்துதான் கென்ய குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள். அவ்வாறான ஓர் சூழ்நிலையில் வளந்தவர் தான் ஃபெயித் கிப்யேகனும்.
ரியோ ஒலிம்பிக்கில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஃபெயித் கிப்யேகனும் கென்யாவை சேர்ந்தவர்தான்.
இவரது கிராமத்தில் மின்சார வசதி கூட கிடையாது. அத்தகைய கஷ்ட சூழலில் வளர்ந்து ஒலிம்பிக் வரை வந்து விட்டார். ஆனால், ரியோவில் ஃபெயித் எத்தியோபியாவின் டிபாபாவை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.
இந்த டிபாபா சாதாரண ஆள் இல்லை. 1,500 மீட்டர் ஓட்டத்தை 3:50:07 விநாடிகளில் கடந்து உலச சாதனை படைத்தவர். ரியோவிலும் தொடக்கத்தில் இருந்தே டிபாபாதான் முதலில் வந்து கொண்டிருந்தார்.
ஆனால் கடைசி ரவுண்டில் வேகமெடுத்த ஃபெயித், டிபாபாவை முறியடித்து இலக்கை 4:08.92 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆனால் ஃபெயித் தங்கம் வென்றது கூட அவரது பெற்றோர் பார்க்க முடியாத நிலை.
ஏனென்றால் கென்யாவின் ஃபெயித்தின் சொந்த கிராமமான டபாபிட்டில் மின்சார வசதி கூட கிடையாது. அடுத்த நாள் பத்திரிகைகளை பார்த்துதான் ஃபெயித்தின் பெற்றோர் தமது மகள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை அறிந்து கொண்டனர்.
'மகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை கூட பார்த்து மகிழ முடியாத சூழலில் தாங்கள் இருந்ததாகவும் அதனால் தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென ஃபெயித்தின் தந்தை சாமுவேல் கிப்யோகன் கென்ய அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, பிரேசிலில் இருந்து ஃபெயித் சொந்த ஊருக்கு திரும்புவதற்குள் அவரது கிராமத்திற்கு மின்சார வசதி அளித்து விடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கென்ய அதிபர்.
துரித கதியில் பணிகள் நடந்தன. ஆகஸ்ட் 26ம் தேதி ஃபெயித்தின் சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது. ஃபெயித்தின் வீட்டுக்கும் மின் வசதி கொடுக்கப்பட்டது.
கிராம மக்கள் மின்சாரம் பெற்றுத் தந்த ஃபெயித்தை மனதார வாழ்த்தினர். ரியோவில் இருந்து சொந்த கிராமத்துக்கு வந்த ஃபெயித்தை கிராம மக்கள் மட்டும் வரவேற்கவில்லை... மின் வெளிச்சமும் வரவேற்றது.
ஃபெயித்தின் கிராமத்துக்கு சாம்சுங் நிறுவனம் டி.வி ஒன்றை பரிசளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
- Vikatan
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் வீராங்கனையின் கிராமத்துக்கே மின்வசதி!
Reviewed by Author
on
September 01, 2016
Rating:
Reviewed by Author
on
September 01, 2016
Rating:



No comments:
Post a Comment