மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பமானது சமூக விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வு
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்து பகிர்வுறவாடல் நிகழ்வு இன்று(11) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வில் சமூக ஆர்வலர்கள்,புத்திஜீவிகள்,இளை ஞர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை இடம் பெறும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வின் மூலம் இளைஞர் யுவதிகள் மத்தியில் அரசியல் ரீதியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தி எதிர் காலத்தில் நல்ல தொரு அரசியல் புத்திஜீவிகளை உருவாக்கும் வகையிலே குறித்த நிகழ்வு அமைந்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்விற்கு துறை சார்ந்த திறனியலாளர்கள் கலந்து கொண்டு கருத்துறவாடால் நிகழ்த்தவுள்ளதால் ஆர்வமுடையவர்கள் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பமானது சமூக விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
September 11, 2016
Rating:

No comments:
Post a Comment