மகன்களின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை....
தமது பிள்ளைகளின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
18 வயது மற்றும் 21 வயதான இரண்டு பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
மட்டக்களப்பு கல்குடாவில் கடலில் குளிக்கச் சென்ற போது இவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இரண்டு சகோதரர்களும் காணாமல் போனதாகவும் இவர்கள் இருவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியைக் கேள்வியுற்ற பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த சகோதரர்களின் பெற்றோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்களின் சடலங்கள் இதுவரையில் மீடகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மகன்களின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை....
Reviewed by Author
on
September 19, 2016
Rating:

No comments:
Post a Comment