கிளிநொச்சி பொது சந்தையில் தீ! எவ்வளவு நஷ்டம்?
கிளிநொச்சி பொது சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர சபையினால் நிருவகிக்கப்பட்டு வரும் இந்த சந்தைத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் 57 கடைகள் முழுமையாக தீயினால் அழிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸார், இராணுவம், விமானப் படை மற்றும் பிரதேச மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினால் இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும், வேகமான காற்றினால் தீ கட்டுப்பாட்டை இழந்து சென்றதனால் 57 கடைகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொது சந்தையில் தீ! எவ்வளவு நஷ்டம்?
Reviewed by NEWMANNAR
on
September 19, 2016
Rating:

No comments:
Post a Comment