அமெரிக்காவுக்கு பறந்தார் ஜெயலலிதா? தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா அதிகமாக பெதட்டீன் என்ற வலி நிவாரணி எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மிக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Methodist Speciality and Transplant மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கல்லீரலும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் அதற்கான சிகிச்சையும் அங்கு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவரும் ஜெயலலிதா கடந்த 2 மாதங்களாக இதற்கான கூடுதல் சிகிச்சையில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழக அரசியலை பொறுத்தவரையில் இது முதன்முறையல்ல முதலமைச்சர் ஒருவர் சிறுநீரக பிரச்னையால் அவதிக்கு உள்ளாவது. கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இதேப்போன்று சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்காவின் Downstate Medical Center, Brooklyn கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் 1985 பிப்ரவரி 4 ஆம் திகதி சென்னை திரும்பினார்.
அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளும் 10 மாதங்களும் அமெரிக்காவில் குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு பறந்தார் ஜெயலலிதா? தமிழக அரசியலில் பரபரப்பு!
Reviewed by Author
on
September 25, 2016
Rating:

No comments:
Post a Comment