தபால் தலை வெளியிட்டு ’தங்க’மாரியப்பன் கெளரவிப்பு!
ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்.
தங்கம் வென்று இந்தியா திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதுவரை 20000 வாழ்த்துக்கள் அடங்கிய லட்டர்களை இ.போஸ்ட் மூலம் பொதுமக்கள் அனுப்பியுள்ளனர்.
இந்த தபால்களை அதிகாரிகள் நேரடியாக மாரியப்பனின் வீட்டிற்கே சென்று அளித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாரியப்பனின் உருவம் பொறித்த தபால் தலையை சேலத்தில் வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளனர்.
முன்னதாக சொந்த ஊருக்கு வந்த மாரியப்பனை மேள தாளம் முழங்க திரளான பொதுமக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
தபால் தலை வெளியிட்டு ’தங்க’மாரியப்பன் கெளரவிப்பு!
Reviewed by Author
on
September 25, 2016
Rating:

No comments:
Post a Comment