அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டையடம்பன் றோ.க. தமிழ் கலவன் பாடசாலை கபடி அணி தங்கம் வென்று சாதனை......


மன்னார்  மாவட்டத்தின் மடுவலையத்தைச்சேர்ந்த கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 15வயது கபடி அணி தங்கம் வென்றுள்ளது.
மாத்தறை மைதானத்தில் கடந்த நான்கு நாட்களாக.... ஒரு மாகாணத்தில் இருந்து 03 அணி வீதம் 09மாகாணத்தில் இருந்தும் 27 கபடி அணியினர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
27அணியினருடன் மோதி  இன்று 11-09-2016எ மது  கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கபடி அணியினர் முதலாம் இடத்தினை பிடித்து தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

கடந்த வருடம் 2015 மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பிடித்து தேசிய ரீதியில் கலந்து கொண்டும் தோல்வியை சந்தித்தவேளை இம்முறை கடின உழைப்பும் பயிற்சியும் விடாமுயற்சியும் வெற்றிக்கனியினை அதுவும் தங்க கனியினை பறித்துள்ளார்கள்.15வயது அணியினர் இடங்கள் முறையே,,,,

  1.  மன்னார் கட்டையடம்பன் றோ.க. த.க பாடசாலை-1st place
  2. கேகாலை சென்.மேரிஸ் கல்லூரி -2nd place
  3. யாழ் இந்துக்கல்லூரி -3rd place
 கபடி அணியின் பயிற்சியாளர் ம.மதுரன் அவர்களுடன் மாணவர்களுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் அதிபர்  அவர்களுக்கும்  மாணவர்களை ஊக்கப்படுத்திய பாடசாலைச்சமூகத்துக்கும்  மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மக்களோடு இணைந்து  நியூமன்னார் இணையக்குழுமமும் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்தி நிற்கின்றோம்.

-வை-கஜேந்திரன்-
 





மன்னார் கட்டையடம்பன் றோ.க. தமிழ் கலவன் பாடசாலை கபடி அணி தங்கம் வென்று சாதனை...... Reviewed by Author on September 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.