மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா வின் முதல் நாள் நிகழ்வு-வடக்கு முதலமைச்சர் பங்கேற்பு.Photos
வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (23) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா கடந்த 10 வருடங்களின் பின் மீண்டும் இம்முறை மன்னாரில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைவாக முதல் நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் ஆரம்பமானது.
முதலில் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்ட ஒளவையார் உருவச் சிலையினை பிரதம வருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வைபவ ரீதியாக திறை நீக்கம் செய்து திறந்து வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மாலை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் இருந்து விருந்தினர்கள் மாலை அணிவித்து மங்களகரமான வரவேற்புடன் வடக்கு மாகாண பண்பாட்டுப் பொருவிழா இடம் பெறும் மன்னார் நகர மண்டபத்தின் அலெக்ஸ்சாண்டர் அலெக்ஸ் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-இதன் போது பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர்களான
பா.டெனிஸ்வரன்,த.குருகுலராஜா,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன்,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரெட்ணம்,மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள்,திணைக்களத்தின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.இதன் போது தமிழ்த்தாய் வாழ்த்து,வரவேற்பு நடனம்,கண்டி நடனம்,சிவ தாண்டவம்,மயில் நடனம் ஆகியவை சிறப்பு நிகழ்வுகளாக இடம் பெற்றதோடு,முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.
குறித்த விருது வழங்களின் போது இலக்கியம்,இசைத்துறை,இசை நடனம்,சிந்து நடைக்கூத்து, நாட்டுக்கூத்து, நாடகம் , பரதநாட்டியம், ஓவியம்,கிராமியக்கலை போன்ற துறைகளைச் சோர்ந்த 20 பேர் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சர் விருது மற்றும் பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.குறித்த விருதுகளை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் விருந்தினர்கள் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தகக்து..ரண்டாம் நாள் நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் சவேரியான் லெம்பேட் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
அன்றைய தினம் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா வின் முதல் நாள் நிகழ்வு-வடக்கு முதலமைச்சர் பங்கேற்பு.Photos
Reviewed by NEWMANNAR
on
September 24, 2016
Rating:

No comments:
Post a Comment