இன்றைய கேள்வி பதில்-25.09.2016
கேள்வி:−
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் சார்!நான் தமிழ் நாடு வேலுாரிலிருந்து சுகன்யா.சார்!அரசு ஊழியராக இருந்த என் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.என் வீட்டாரின் கட்டாயத்தினால் மறு திருமணம் பண்ண உள்ளேன்.கருணை அடிப்படையில் என் கணவரின் அரசு வேலையை எனக்கு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து உள்ளேன்.தற்போது மறுமணம் செய்துகொள்வதால் கருணை அடிப்படையிலான அந்த வேலை எனக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்குமா?
பதில் −
அன்பான சகோதரியே! நீங்கள் மறுமணம் செய்கையில்,உங்களுடைய கணவரின் அரசு வேலை கிடைப்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். கருணை அடிப்படையில் வேலை என்பதன் நோக்கமே, எதிர்பாராத நிகழ்வு(கணவர் இறப்பு) காரணமாக அந்தக் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். இந்த நிலையில் நீங்கள் மறுமணம் செய்தால், கருணை அடிப்படையில் அந்த வேலை கிடைப்பது நிச்சயம் மறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.அதை மறைத்து வேலை வாங்கினாலும்கூட, பின்னாளில் உண்மை நிலை தெரிய வரும்போது, நீங்கள் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பெண்ணானவள் கணவன் இறந்தால் மறுமணம் செய்வதே நல்லது.எனவே முதலில் தாங்கள் "கருணை அடிப்படையில் கிடைக்கும் தங்கள் கணவரின் வேலையை பெற்றுக் கொள்ளுங்கள்.அரச வேலையினை பொறுப்பெடுத்து 90நாட்களுக்கு பிறகு திருமணம் பண்ணுவது நல்லது. கருணை அடிப்படையிலான அரசவேலையை ஏற்றுக்கொண்ட பிறகு, எவரேனும் முறைப்பாடு/குறைபாடு தெரிவிக்காதவரை மறுமணம் முடிப்பதனால் பெரிய சிக்கல் வருவதில்லை.
இன்றைய கேள்வி பதில்-25.09.2016
Reviewed by NEWMANNAR
on
September 25, 2016
Rating:

No comments:
Post a Comment