மன்னார் மின்சார சபை அதிகாரிகளுக்கு பணிவான வேண்டுகோள்….
மன்னார் மாவட்டத்தில் தற்போது பலவாறான அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது மிகவும் சந்தோசமான விடையம் ஏன் எனில் நீண்ட காலத்திற்குபின் நடைபெறுகின்ற அபிவிருத்தியினால் மன்னார் மாவட்டம் வளர்ச்சி கண்டு வருவது மகிழ்ச்சியே…..
மன்னார் மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக இருந்த விடையம் மின்சாரத்துண்டிப்புத்தான் தற்போது இந்தப்பிரச்சினை தற்போது குறைந்து வருகின்றது.
தங்களின் சிறப்பான சேவையை காட்டுகின்றது. அதற்கு முதலில் பாராட்டுக்கள்…
மன்னாரில் தற்போது நீண்டகாலமாக பாவனையில் உள்ள பழைய மின்மானிகளையும் மின்மீற்றர்களையும் மாற்றி புதிதாக இணைப்புக்களை வழங்கி வருகின்றீகள் அதைப்போலவே நீங்கள் செய்ய வேண்டிய இன்னுமொரு முக்கியமான வேலையும் உள்ளது.
இருப்பினும் சிலபிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றது அதை தங்களுக்கு தெரியப்படுத்தவதே இந்த மடலின் நோக்கம.
மன்னாரில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் மிகவும் மோசமான இறந்த நிலையில் பழுதடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது அத்தோடு மின்னினைப்பு வயர்கள் மிகவும் தாழ்வாக பதிந்தும் அறுந்தும் தொங்கும் நிலையில் காணப்படுகின்றது.
தற்போதைய தேவை…..
மிகவும் மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றுங்கள்.
தாழ்வாக தொங்கும் வயர்களையும் சரியான முறையில் இணைப்பினை செய்யுங்கள்.
வீதிகளில் குறுக்காகவுள்ளதும் மரங்களுக்கு இடையில் உள்ள மின்கம்பங்களிலும் கவனம் செலுத்தவேண்டும்.
ஏனையவை தங்களுக்கு தெரிந்தவையே…
மிகவும் துரித கதியில் தங்களது செயற்பாடு தொடங்கப்படவேண்டும் ஏனெனில் காற்று வீசியவண்ணம் உள்ளதோடு மழைகாலம் நெருங்குகின்றது அத்தோடு க.பொ.த பரீட்சைக்கான கல்விச்செயற்பாடும் ஏனைய அபிவிருத்தி வேலைகளுக்கும் மின்சாரம் அவசியமானது என்பது தங்களுக்கும் தெரிந்த விடையமே…
மக்களிடம் உங்களின் அருகில் உள்ள இறந்த மின்கம்பங்கள் பற்றிய தகவலை கேட்டறியலாம் இதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் பிரச்சினையை கண்டறிந்து உடனடியாக தீர்வைப்பெறலாம் என்பது எனது கருத்து…
விரைவான சேவை தற்போது எமக்கு தேவையாகவுள்ளது…
-மன்னார்விழி-

மன்னார் மின்சார சபை அதிகாரிகளுக்கு பணிவான வேண்டுகோள்….
Reviewed by Author
on
September 11, 2016
Rating:

No comments:
Post a Comment