விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற ராக்கெட் வெடித்து சிதறியது.....
விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற தனியார் ராக்கெட் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விண்வெளி ஆய்வுக்காக பூமியிலிருந்து சுமார் 450 கி.மீற்றர் உயரத்திற்கு மேல் ஐ.எஸ்.எஸ் என்ற பெயரில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைக்க அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளும் இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் விண்வெளி ஆய்வு மைத்திலிருந்து 'ஸ்பேஸ்எக்ஸ் - பால்கன் 9' என்ற ராக்கெட் விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற போது திடீரென நடு வானில் வெடித்து சிதறியது.
ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்தும் தகவல்கள் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.
வெடித்து சிதறிய ராக்கெட்டால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதை அங்கிருந்த பொது மக்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த தொலைபேசியில் வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அருகில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சற்று குலுங்கியதாக கூறப்படுகிறது..
விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற ராக்கெட் வெடித்து சிதறியது.....
Reviewed by Author
on
September 02, 2016
Rating:
Reviewed by Author
on
September 02, 2016
Rating:


No comments:
Post a Comment