அண்மைய செய்திகள்

recent
-

உயிருக்கு போராடிய மாணவிகளை காப்பாற்றிய 10 வயது சிறுவன்!


பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான்.

கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர்.

ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில் குதித்து ஒவ்வொரு மாணவியாக மீட்டு கரை சேர்த்துள்ளார்.

இதில் இரண்டு மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர், துணிச்சலுடன் செயல்பட்ட சிறுவன் நான்கு மாணவிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

உயிரை காப்பாற்றிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசாங்கம் சிறுவனுக்கு தேசிய வீரதீர விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உயிருக்கு போராடிய மாணவிகளை காப்பாற்றிய 10 வயது சிறுவன்! Reviewed by Author on September 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.