அண்மைய செய்திகள்

recent
-

தமிழகப் பேராசிரியர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்கம்

அரங்க செயற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் , யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம்வீதியில் "அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழகப் பேராசிரியர்கள் பங்குகொள்ளும் நாடகமும் அரங்கியலும் துறை சார்ந்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க .சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் தமிழகத்தின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.இராமசாமி''தமிழக அரங்கப்போக்குகள்(பண்டைய காலம் உட்பட) ''தொடர்பாகவும் , புதுடெல்லி பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.ரவீந்திரன் '' தமிழக நவீன நாடகப் போக்குகள் '' தொடர்பாகவும் உரையாற்றவுள்ளார்கள் .எனவே நாடகமும் அரங்கியலும் துறை சார்ந்த உயர்தர மற்றும் பல்கலைக்கழகமாணவர்கள் , ஆசிரியர்கள் உட்பட ஆர்வலர்களும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இவரது உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகப் பேராசிரியர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்கம் Reviewed by NEWMANNAR on September 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.