முதன்முறையாக விமானம் ஓட்டி சாதனை படைத்த சகோதரிகள்!
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 ரக விமானத்தை ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகளான மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத் இருவரும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தில் விமானிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார். தற்போது தங்கை ஏர்ரம் மசூத்தும் போயிங் -777 ஓட்டுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் முதன்முறையாக ஒரே நேரத்தில் போயிங் -777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தான்யல் கிலானி கூறுகையில், இதற்கு முன்பு சகோதரிகள் இருவர் ஒரே எடைபிரிவில் போயிங் -777 விமானம் ஒட்டியதாக முன்பு எங்கும் ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக விமானம் ஓட்டி சாதனை படைத்த சகோதரிகள்!
Reviewed by Author
on
September 01, 2016
Rating:

No comments:
Post a Comment