ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐக்கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.
இதையடுத்து, இது தொடர்பான மனு, சென்னை ஐக்கோர்ட் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வில், மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு வருகிறது.
ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க ராம்குமார் தரப்பு விடுத்த கோரிக்கை ஏற்பு.பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு
ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
September 19, 2016
Rating:

No comments:
Post a Comment